அன்பில் அமைதியைத் தேடு
இளமையில் கல்வியைத் தேடு
ஒற்றுமையில் பலத்தைத் தேடு
கோபத்தில் பொறுமையைத் தேடு!
பயணத்தில் விவேகத்தைத் தேடு
சிந்தனையில் அறிவைத் தேடு
சிரிப்பில் ஆரோக்கியத்தைத் தேடு
தோல்வியில் முயற்சியைத் தேடு!
நட்பில் நம்பிக்கையைத் தேடு
கற்பனையில் கவிதையைத் தேடு
வேதனையில் உறுதியைத் தேடு
வாழ்க்கையில் நீ உன்னைத் தேடு!
No comments:
Post a Comment